ராணிப்பேட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்ட திமுக  அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட அவை தலைவர். சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ஜே எல் ஈஸ்வரப்பன் எம் எல் ஏ, மாவட்டத் துணைச் செயலாளர்கள். துரை மஸ்தான் ,சிவானந்தம் ,குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நவம்பர் 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

ராணிப்பேட்டை நகர பேரூர் ஒன்றிய கிளை கட்சிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி அன்னதானம் மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிக்க வேண்டும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும் நிர்வாகிகள் வீண் செலவு செலவழிக்காமல் மக்கள் பயன்பெறுவகையில் செலவு செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் எஸ் ஐ ஆர் முகாம்கள் பூத் வாதியாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தினங்களில் பி எல் ஏ 2 நிர்வாகிகள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவருடைய பிறந்தநாள் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் ரத்த தானம் அன்னதானம் கண் சிகிச்சை முகாம் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்குதல் கட்சி நிகழ்ச்சிகள் தெருமுனை பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தி இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நகர ஒன்றிய பேரூர் கழக கிளை நிர்வாகிகள் அனைத்து அணிகளின் சார்பிலும் பிறந்தநாள் விழாவை மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நீரோட்டப்பட்டது. கூட்டத்தில் நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பிற அணிகளின் அமைப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!