பாமக நிறுவனர். மருத்துவர் இராமதாஸ் தலைமையில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுகுழு கூட்டம்!!


பாட்டாளி மக்கள் கட்சியின்  ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.இந்த பொதுகுழு கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில்,


எனக்கொரு மகன் பிறப்பான் என்னை போல இருப்பான் என நினைத்தேன் ஆனால் எனது உரிமையினை பிரித்துவிட்டார் ஆனால் இனி என் உரிமையை இனி யாரும் பிரிக்கமுடியாது பறிக்க முடியாது என பேசினார்.மேலும் தன்னை தலைவர் என்று தன்னை தானே சொல்லி வருகிறார் அன்புமணி, எனவும், இந்த இராமதாசை வெல்ல முடியாது எனவும், 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிரமங்களில் என் மக்களின் நலனை காத்து வருகிறேன் எனவும், அதனால் நானே தலைவராக இருப்பேன் எனக்கு உதவியாக என் மகள் ஸ்ரீ காந்தி செயல் தலைவராக நியமித்து உள்ளேன் எனவும், அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது எங்களை ஏமாற்றி பொதுகுழுவில் தலைவர் என மாற்றி பழைய தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள், பணம் விளையாடிவிட்டது எனவும் அவர் பேசினார். 

மேலும் தனியாக நின்று நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றோம் ஆனால் கூட்டணி வைத்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளோம் இதற்கு யார் காரணம் அன்புமணியின் தவறான முடிவுதான் காரணம் எனவும், தேர்தல் ஆணையத்தில் ஒரு அதிகாரி கூறினார் இந்த ஆணையத்தில் நேர்மை இல்லை, நியாயம் இல்லை எனவும. அதனால் நீதிமன்றம் செல்லுங்கள் என அந்த அதிககாரி கூறினார் அதனால் திங்கள் கிழமை நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என மருத்தூவர் இராமதாஸ் பேசினார். எனக்கு உடல் நிலை சரியில்லாத போது 81 பேர் வந்து பார்த்து விட்டு சென்றனர் ஆனால் அன்புமணி மருத்துவமனையில் கீழ் தளத்தில் விசாரித்து விட்டு சென்று விட்டார் எனவும், இனி உன் பாட்ஷா என்னிடம் பலிக்காது என அன்புமணிக்கு எச்சரிக்கை விடும் விதமாக பேசினார்.

96 ஆராயிரம் கிராமங்களில் நான் சென்று வந்துள்ளேன் நீ முனை கிளையில் இருந்து கொண்டு அடி மரத்தினை வெட்டி வருகிறாய் அதனால் நீ என்னவாக இருப்பாய் எனவும் அந்த மரத்தின் நிழலில் இருப்பது என் மக்கள் எனவும் பேசினார். இனி வரும் காலங்களில் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்குவேன் எனவும் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, சட்டமன்ற உறுப்பினர் அருள், கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!