நத்தத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முகாம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியர். ஆறுமுகம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர். விஜயநாத், தேர்தல் துணை வட்டாட்சியர்  சரவணன்,  துப்புரவு ஆய்வாளர் செல்வி.சித்ராமேரி,வருவாய் ஆய்வாளர். துர்கா தேவி, கிராம நிர்வாக அலுவலர்கள். ராஜேஸ்குமார், சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்துநிலையம் வந்தடைந்தது. வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில் வருவாய், பேரூராட்சி துறைகள் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!