நத்தம் பேரூராட்சியில் பணி ஆணை வழங்கும் விழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கி பணி ஆணை வழங்கி திட்டம் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துக் கூறினார். துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக வந்திருந்த அனைவரையும் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் வரவேற்றார். இதில்  ஒரு நபர்  வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 45 பேருக்கு  ஆணைகள் வழங்கப்பட்டது. இதில்  துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி,பேரூராட்சி உறுப்பினர்கள் பணியாளர்கள் ஊழியர்கள், பயனாளிகள்  கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் பிரசாத் நன்றி கூறினார்.

படவிளக்கம்: நத்தம் பேரூராட்சி சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும்  திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணையினை தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா வழங்கினார். அருகில் செயல் அலுவலர் விஜயநாத்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!