காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற கடலூர் கிழக்கு மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம்!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம், காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே கலையரங்கத்தில் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர். இள.புகழேந்தி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ( SIR - வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும் பணி) மற்றும்
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர். G. ஐயப்பன் MLA, மு.சட்டமன்ற உறுப்பினர். துரை.கி.சரவணன், தலைமை கழக தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட கழக தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக பொருளாளர். எம்.ஆர்.கே.பி.கதிரவன் உள்ளிட்ட மாவட்ட ,மாநகர,ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,நிர்வாகிகள், சார்பு அணியின் அமைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக