சீமான் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, எஸ் ஐ ஆர் தொடர்பாக கேள்வி கேட்ட தனியார் தொலைக்காட்சி நிருபரை, தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தனியார் டிவி நிருபர் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து வெளியேற்றினர். இதுகுறித்து அந்த நிருபர் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது
மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக