திருமயம் : ஆபத்தான நிலையில் மின் கம்பம்.அதிகாரிகள் கவனிப்பார்களா?..
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா பூனையன் குடியிருப்பில் ரைஸ் மில் அருகே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து அடிப்பகுதியில் கம்பிகள் முறிந்து வலுவிழந்த நிலையில் உள்ளது. அது எந்த நேரமும் காற்று,மழையில் சாய்ந்தால் சேதம் ஏற்படும் இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் அதனை கடந்து செல்கின்றனர். எனவே மின்சார வாரிய அலுவலர்கள் இதனைப் பார்வையிட்டு புதிதாக ஒரு மின்கம்பம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக