மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களை கண்டித்து கீழ்குப்பம் வார்டு உறுப்பினர் வெளிநடப்பு !!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஒன்றியத்தில் கீழ்குப்பம் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் நவம்பர் முதல் தேதி உள்ளாட்சி தினம் முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் இரண்டு போலீசாரின் பாதுகாப்போடு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர். பிரவீன் குமார் தலைமை தாங்கினார். 7வது வார்டு உறுப்பினர். ஜான் விக்டர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் திரளான கிராம மக்கள், தூய்மை பணியாளர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது வார்டு உறுப்பினர். ஜான் விக்டர் பேசிய போது சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA அவர்கள் கீழ்குப்பம் ஊராட்சிக்கும் எனது வார்டிற்கும் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் ஆனால் நான்கு வருடம் ஆகியும் தனது வார்டிற்கு ஒரு சின்ன (திட்ட பணிகளுக்கு) வேலைக்கும் நிதி ஒதுக்கி தராத மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபுவையும், ஒன்றிய கவுன்சிலர். சரண்யா சரவணன் ஆகியோரை கண்டிப்பதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வார்டு உறுப்பினர். ஜான் விக்டர் வெளியேறினார் இதனால் கீழ்குப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பரப்பரப்பு நிகழ்ந்தது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக