கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்- இரண்டு சிறுவர்கள் படுகாயம்!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் என்ற கிராமத்தில் அதை ஊரை சேர்ந்த பழனி குமார் என்பவர் கந்தநாதர் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அங்கு நின்றிருந்த சரவணன் மற்றும் ஆதிகேசவன் என்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதி விட்டு, சாலையோரம் இருந்த இரண்டு கடைகள் மீதும் மோதியதில் இரண்டு கடைகளும் பலத்த சேதமடைந்தது. இரு சிறுவர்களும் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் இரண்டு சிறுவர்கள் மீது மோதி இரண்டு கடைகள் மீதும் மோதியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக