சோளிங்கர்: தாயுமானவர் திட்டம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த எஸ்.பி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் இ ஆ ப. அவர்கள் இன்று சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் வேலம் ஊராட்சியில் கூட்டுறவு துறையின் மூலம் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்களுக்கு வீடு தேடி சென்று உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா இணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் பார்த்திபன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி, துணைப் பதிவாளர். சிவமணி, வட்டாட்சியர். செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக