தென்னகத்தின் காஷ்மீர் காந்தளூர்!


போடிநாயக்கனூரிலிருந்து காந்தளூருக்கு: ஒரு அழகிய மலையஞ்சல் பயணம் சென்னையைச் சேர்ந்த பயணிகளுக்காக, 20601 சென்னை – போடிநாயக்கனூர் வண்டி ஒரு அற்புதமான வசதியாக உள்ளது. இரவு நேரத்தில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையத்தில் ஏறி,  , காலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் போடிநாயக்கனூர் நகரை அடைந்து விடலாம். இங்கிருந்து கேரளாவின் அதிசய மலையகமான காந்தளூர் மிகவும் எளிதாகச் செல்லக்கூடிய இடமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நமக்கு மிக அருகில் உள்ள கேரளப் பகுதி என்றால் அது காந்தளூர்தான்... ஊட்டி கொடைக்கானல் மூணார் வாகமன் காந்தளூர் நெல்லியம்பதி உள்ளிட்ட மலைவாழ் இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலையமைப்பைக் கொண்டவை..அந்த வகையில் காந்தளூரும் சற்று வித்தியாசமான மலை அமைப்பைக் கொண்டது...

தென்னிந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆப்பிள் விளையும் இடம் காந்தளூர்... தென்னிந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் கரும்பு விளையும் இடம் காந்தளூர்.... சமவெளிப் பகுதியில் விளையும் பல பொருட்கள் காந்தளூர் மலைப்பகுதியில் விளைகிறது... காந்தளூரில் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்...

சந்தனக் காடுகள் ஆப்பிள் தோட்டங்கள் ஸ்ட்ராபெரி தோட்டங்கள் பிரம்மரம் வியூ பாயிண்ட் இயற்கை தேன் உற்பத்தி மையம் நாட்டு சக்கரை உற்பத்தி மையம் முருகன்மலை கீழந்தூர் வாட்டர் பால்ஸ் இரைச்சல் பாரா வாட்டர் பால்ஸ் தூவனம் வாட்டர் பால்ஸ் கருமுட்டி வாட்டர் பால்ஸ் போன்றவை... கீழே உள்ள படத்தில் உள்ளது இரைச்சல் பாரா வாட்டர் பால்ஸ் போடி நாயக்கனூரில் இருந்து 20602 ரயில் மூலம் திரும்பிச் செல்வது


போடிநாயக்கனூர் ரயில் நிலையம் சென்னைக்கு செல்லும் 20602 போடிநாயக்கனூர்–சென்னை வண்டியின் துவக்க நிலையம். நிலையத்தில் முன்கூட்டியே 30–40 நிமிடங்கள் முன்பு சென்று ரயிலில் ஏறலாம். மலையக குளிரை பின்னே விட்டுவிட்டு, நீங்கள் வந்த அதே வசதியான ரயில் பாதையில் சென்னையை எளிதாக அடைந்து விடலாம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!