புரட்சி பாரதக் கட்சியின் மாநில தலைவர். ஜெகன் மூர்த்தியார் –ஆற்காடு நிகழ்வுகளில் பங்கேற்று புதிய பொறுப்பாளர் நியமனம்!


ராணிப்பேட்டை மாவட்டம் புரட்சி பாரதக் கட்சியின் மாநில தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான. ஜெகன் மூர்த்தியார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, ஆற்காடு நகர புதிய நகரச்செயலாளராக கே.யு. தீபக் நியமிக்கபட்டு, அவரை மாநில தலைவர் ஜெகன் மூர்த்தியார் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் காரை ஏ. ஜெகன், ஆற்காடு தொகுதி செயலாளர் தேவா, மாவட்ட துணை செயலாளர் நந்தியாலம் ராஜா, மாவட்ட மூர்த்தியார் பேரவை செயலாளர் ஏ.இ. பாலாஜி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் சி.டி. வெங்கட் (ஸ்டீபன் ராஜ்), மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெ. சந்தர், விசாரம் தென்னரசு, சாத்தூர் விக்னேஷ்குமார் உள்ளிட்ட ஒன்றியம், நகரம் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர். ஜெகன் மூர்த்தியார் மாவட்டம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஒவ்வொரு கிளையிலும் கட்சிக் கொடியை ஏற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது பொறுப்பாளர்கள் திறம்பட செயல்பட உறுதியளித்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளோம். வரும் ஜனவரி மாதம் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தலித் ஆணவப் படுகொலைகளை கண்டித்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். ராணிப்பேட்டை–வேலூர் மாவட்டங்களிலும் விரைவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!