பழனி நகர காவல் நிலையத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் கைதாகி வருகின்றனர்!
பழனி பகுதியில் சிலர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக டிஎஸ்பி தனஜெயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் கல்லூரி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக திரிந்த நான்கு நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர் அதில் சந்தோஷ் (20) தகப்பனார் பெயர் வேலாயுதம், வில்லியம் (19) தகப்பன் பெயர் ஜான் பால், அறிவுநிதி (21) அப்பா பெயர், சுப்பிரமணியன், மணிகண்டன் (19) அப்பா பெயர் மைக்கேல் ராஜ் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது உடனடியாக அவர்களை போலீசார் கைது நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக