அறந்தாங்கி வாரச்சந்தையில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை இடம் மாற்றக் கோரி இலவச தோல் நோய் மருத்துவ முகாம்.!!
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக ,அறந்தாங்கி வாரச்சந்தையில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை பெருகிவரும் நகரமயமாக்கல் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வேறு இடத்திற்கு மாற்றக் கோரி 28 -11 -2025 அன்று மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம், அறந்தாங்கியில் நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரசின் மாநில கொள்கை பரப்பு செயலாளர். கராத்தே கண்ணையன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர். தமிழ்ச்செல்வன்,பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர். கவிதா ஸ்ரீகாந்த், மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணியின் மாநில செயலாளர் முனைவர். முபாரக் அலி, அறந்தாங்கி வாரச்சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள். ரபீக், செந்தில், ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள்.
தோல் நோய் மற்றும்அழகுக்அழகுக்கலை மருத்துவரும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவருமான மருத்துவர் தெட்சிணாமூர்த்தி மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
100பயனாளிகள்பயன்பெற்றனர்.திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் பொருளாளர் திரு முகமது முபாரக், ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, குலாம் மைதீன், ரவீந்திரன், மற்றும் கான் அப்துல் கபார்கான் ஆகியோர் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக