சோளிங்கர் கனிகாபுரம் அருந்ததியர்கள் பாதை வசதிகள் கோரி உண்ணாவிரதம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர்  ஒன்றியம் ‌தலங்கை பஞ்சாயத்தில் கனிக்காபுரம் அருந்ததியர் கிராமம் உள்ளது  நான்கு  தலைமுறையாக 150 ஆண்டு காலமாக வசதி வாய்ப்பின்றி வசித்து வருகிறார்கள். இவர்களின் கிராமத்திற்கான பொது பாதையும் மற்றும்  மயான பாதையும் இல்லாமல் இருந்து வருகிறது இது தொடர்பாக கிராம மக்கள்  சார்பில் பலஆண்டு காலமாக மனு கொடுத்தும் பயனில்லாத இருப்பதாக தெரியவருகிறது இந்த நிலையில் கடந்த  ஐந்து ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள்  பேரவை சார்பாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லாத நிலை இருப்பதாக கூறபடுகிறது

ஆகவே அருந்ததியர் மக்கள் பேரவை நிறுவனர் தலைவர்டாக்டர். குருவை குமார் தலைமையில் ஊர் மக்களுடன் இணைந்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில்  மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜன் மாவட்ட மகளிர் அணி தலைவர் அமுதா மற்றும் பேரவை தோழர்கள் தோழிகளும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!