ராணிப்பேட்டையில் பெருந்தலைவர். காமராஜர் அவர்களின் நினைவகத்தை திறந்து வைத்த தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்!!
ராணிப்பேட்டைமாவட்டம்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையால் 15.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர். காமராஜர் அவர்களின் நினைவகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள். ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஏ.எம். முனிரத்தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா.இ.ஆ.ப. நகர் மன்றத் தலைவர். சுஜாதா வினோத், துணைத் தலைவர். ரமேஷ் கருணா, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக