காட்பாடியில் புதிய லயன்ஸ் சங்க கிளை விஐடி பல்கலைகழக உதவி துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம், காட்பாடி பன்னாட்டு லயன் சங்கங்கள் மற்றும் காட்பாடி லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய கிளையாக காட்பாடி மாஸ்டர் பிளானர்ஸ் லயன்ஸ் சங்கம் என்ற புதிய சங்க துவக்க விழாவும் சாசனம் வழங்கும் விழாவும் சேவை திட்டங்கள் வழங்கும் விழாவும் இன்று காட்பாடியில் உள்ள திருமகள் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர். கே.சோக்காரராமன் தலைமை தாங்கினார். சாசன செயலாளர். ஆர்.சேகர் வரவேற்று பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர். காதம்பரி.ச.விஸ்வநாதன் தமிழ்நாடு அரசின் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் டாக்டர். வி.எஸ்.விஜய் ஆகியோர் புதிய சங்கத்தினையும் சேவை திட்டங்களையும் தொடக்கிவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
மாவட்ட ஆளுநர் என்.டி.பாஸ்கரன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து சாசனம் வழங்கி சிறப்புரையாற்றினார். புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் இணைத்து உதவி மாவட்ட ஆளுநர். பி.பூர்ண சந்திரன் சிறப்புரையாற்றினார்.
புதிய சங்கத்தின் சாசன தலைவராக எஸ்.எட்வர்ட் உதயராஜ், சாசன செயலாளராக டாக்டர். ஆர்.ஜெயகர் சாசன பொருளாளராக டி.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
காட்பாடி ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர். செ. நா.ஜனார்த்தனன், காட்பாடி லயன் சங்க செயலாளர். ஆர்.ராதாகிருஷ்ணன் பொருளாளர் எஸ். சுரேஷ் குமார் லயன்ஸ் சங்கத்தின் மண்டல தலைவர். எம்.திலகர், தலைவர் டி.செல்வமணி, ஒருங்கிணைப்பாளர். டி.மணிமேகலை, முன்னாள் மாவட்ட ஆளுநர். சி.புவனேஸ்வரி, செயலாளர். எஸ்.சீனிவாசன், கே.பொன்னம்பலம், என்.தங்கவேல், கே.ஆர்.ரவி, சி.புருணோத்தமன், பி.ராஜசேகர் பெல்.ரத்தினம், பி.பி.பழனியப்பன், டி.ரெங்கராஜன், டி.சுந்தரமூர்த்தி, ஜெகன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதிய சங்கத்தின் சாசன துணைத்தலைவராக வி.கிரேசி கெட்சிராணி, சாசன துணைச் செயலாளராக எஸ்.வெங்கட்குமார், துணை பொருளாளராக கே.எஸ்.தேவேந்திரன், இயக்குநர்களாக ஜி.மாணிக்கவாசகம், எம்.முருகேசன், சுதர்சனம், ஜோஸ்வா, சதீஸ்குமார், உமாசந்தர், வேழவேந்தன் ஐசக் சர்குணராஜ், கே தணிகை அருள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும், முதியோர் உள்ளிட்டவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன முடிவில் பொருளாளர். சரவணன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக