புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு தாழ்தள பேருந்து இயக்கப்படுமா? எதிர்பார்க்கும் மக்கள்!!
புதுக்கோட்டை ரயில்நிலையத்திற்கு போக்குவரத்து வசதி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி இடையே நகர பகுதிகள் வழியாக புதிய தாழ்தள பேருந்து அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதே போல புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு தாழ்தள பேருந்து இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுக்கு 6.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு இதுவரை முறையான பொது போக்குவரத்து வசதியை புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கு ஏற்படுத்தி தரவில்லை. விரைவில் ஏற்படுத்தவேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக உள்ளது.
குறிப்பு: அருகில் உள்ள காரைக்குடி மாநகராட்சியில் கூட ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சமீபத்தில் வட்ட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடியோடு இணைந்த மாநகராட்சியான புதுக்கோட்டைக்கு ஏன் இந்த நிலை என தெரிய வில்லை?..
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக