ரோடு ஓரங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா! பாதசாரிகள் கேள்வி?
தேனி மாவட்டம்,தேனி ஹவுஸிங் ஃபோர்டிலிருந்து தேனி புது பஸ்டாண்ட் வழியில் ரோடு ஓரங்களில் ஆங்காங்கே கொட்டி கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு .குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால், நிலம், நீர் மற்றும் காற்று என அனைத்தும் கடுமையாக மாசடைகின்றன [நெகிழிப் பைகள், மின்னணுக் கழிவுகள் போன்ற சிதைவடையாத பொருட்கள் மண்ணின் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன.
குப்பைகள் தேங்குவதால் கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்ற நோய்க்கிருமிகள் பரவும் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்கின்றன .இது டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உருவாகவும், காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படவும் காரணமாகிறது. குப்பைகளை எரிப்பதால் வெளியாகும் நச்சுப் புகைகள் சுவாசக் கோளாறுகளை உண்டாக்குகின்றன.குறிப்பாக நெகிழிப் பொருட்களை உணவு எனத் தவறுதலாக மாடுகள் உட்கொள்வதால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன அல்லது இறக்க நேரிடுகிறது. குப்பைகள் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக