போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர், அலுவலக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு!!

தேனி மாவட்டம்,சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு நிலை அலுவலர்களுக்கு பயிற்சி போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் அலுவலக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்சித் சிங் IAS அவர்கள் தலைமை தாங்கி பேசினார். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்களை வழங்குதல் வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலில் உள்ள பெயருடன் இணைந்து சரிபார்த்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் இணைப்பவர்களுக்கு படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவமு வாக்காளர் கணக்கெடுப்பு வடிவத்தை நிரப்ப உதவி அந்த படிவத்தை சேகரித்து வாக்காளர் பதிவு அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பித்தல் கணக்கெடுப்பு படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளர்களின் காரணங்களை குறித்து வைத்தல் ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்த்தல் இறந்தவர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோரை கண்டறிந்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில் தேனி மாவட்ட வளங்கள் அலுவலர். நல்லையா தாசில்தார்கள். சந்திரசேகரன், சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் வழங்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!