நத்தம் அருகே சாலை தடுப்பில் பால் வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலி!
திண்டுக்கல், நத்தம், அப்பாஸ்புரம் அருகே சாலை தடுப்பில் பால்வேன் மோதி விபத்து. இந்த விபத்தில் பால்வேன் டிரைவர் தோட்டனூத்து, பாத்திமா நகரை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டோ (42) சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பால் வேனின் கதவை உடைத்து ஜார்ஜ் பெர்னான்டோவின் உடலை மீட்டனர். நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கோபால்பட்டி, ஏரமநாயக்கன்பட்டி, காட்டு வேலம்பட்டி, சேர்வீடு பிரிவு, மெய்யம்பட்டி, அப்பாஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளால் விபத்துக்கள் தொடர் கதையாகி வருகிறது. இன்னும் எத்தனை உயிர்களை பழிவாங்க காத்திருக்கிறதோ இந்த சாலை தடுப்புகள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பு உள்ளனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக