புதுக்கோட்டையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம். கே. ஆர்ப்பாட்டம்!!
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக மக்களை இழிவு படுத்திய பிரதமர் மோடியை கண்டித்தும் அவசர அவசரமாக எஸ். ஐ. ஆர் என்ற பெயரில் வாக்குத் திருட்டு மோசடியில் ஈடுபட்டு இருக்கிற மோடி அரசையும் துணை போகும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு மாநகர செயலாளர். ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் தோழர். எம். என். ராமச்சந்திரன் உரை நிகழ்த்தினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணை செயலாளர். ஆர். சொர்ண குமார் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர். க. அம்பிகாபதி மூத்த தோழர். எஸ். காளிமுத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்;போராட்டத்தில் மாநகர துணைச் செயலாளர். ஏ. நாகூர் கனி சுருளி, மணி புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர். எஸ். செல்லப்பா திருமயம் ஒன்றிய செயலாளர். க.சுந்தர்ராஜன் மாத சங்க மாவட்ட தலைவர். எஸ். சரஸ்வதி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். பி. வெங்கடேசன், ஜீ. கலையரசன் மாதர் சங்க நிர்வாகிகள். ராதிகா, தேவி யுஐடியுசி மாநிலக் குழு உறுப்பினர். தெய்வானை உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக