புதுக்கோட்டை : ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆராய்ச்சி குழுவினர் ஆராய்ச்சி !!
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஆவுடையார் கோவிலில் கல்வெட்டு ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த நந்தர், சந்திரபோஸ் ஆகிய இருவரும் கோவிலில் உள்ளிட்ட கல்வெட்டு படிமங்களை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை படிவம் எடுத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர் இதன் வழியாக பண்டைய காலத்தில் கோவிலைக்கட்டியவர் யார் , கோவில் எழும்பிய காரணங்கள் என்ன போன்ற ஆன்மிக அடித்தளம் வெளிவரும். நமது நாட்டின் மீது படை எடுத்தவர்கள் யார்? எவ்வாறு புறமுதுகு காட்டி ஓடினர், தெய்வத்தின் சக்தி, என்னென்ன சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாடு, தமிழரின் காதல் போன்றவை உள்ளங்கை நெல்லிக்காய் போல தெளிவுடன் தெரியவரும். இந்த குழுவினரின் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. பேராசிரியர் சந்திரபோஸ் புதுக்கோட்டை பேராசிரியர் ஆவார். மற்றவர் நாமக்கலைச் சேர்ந்த நந்தன் ஆவார். இவர் 33 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஆன்மிக பக்தியால், பற்று எற்பட்ட காரணத்தால் உழவாரப் படை செய்வது போல கோவில் கல் சுவர்களில் கல்வெட்டுகளில் காணப்படும் ஆன்மிக வரலாற்றை படிமம் எடுக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆராய்ச்சியின் முடிவில் பொதிக்குள்ள ஆன்மீக கருத்துக்கள் தமிழ் வடிவில் தெரியவரும். ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு தெரிந்த ஆன்மீக வரலாற்றை வெளி உலகத்திற்கு காட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக