சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம். முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு!!
புதுக்கோட்டை மாவட்டம்,அரிமளம் ஒன்றியம் காரமங்கலம் ஊராட்சி விஸ்வநாதபுரத்தில் நல்லக்குறிச்சி ஏரிக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ யோக சாய் பாபா கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. விழாவில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,கோபூஜை,யாகசாலை பூஜைகள்,தீபாராதனைகள் நடந்தன. பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று அலங்கார நுழைவு வாயில், தரைக்கோயிலில் அபிஷேகம் செய்தனர். விழாவில்
முன்னாள் எம்.எல்.ஏ.வைரமுத்து, அரிமளம் ஒன்றியக்குழு தலைவர். கணேசன், காங்.தலைவர் கணேசன், அதிமுக ஒன்றிய செயலாளர். செல்வராஜ் சேர்வை, தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளர். சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். படவிளக்கம்.திருமயம் தாலுகா,காரமங கலம் ஊராட்சி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக