உசிலம்பட்டி - வத்தலகுண்டு செல்லும் சாலையை சீர் செய்து தருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
உசிலம்பட்டி - வத்தலகுண்டு செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகாமையில் கடந்த ஒரு ஆண்டுகளாகவே மிகவும் மோசமான நிலையில் சாலை இருப்பதால் பொதுமக்களுக்கும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது . குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தூசிகள் பறந்து புகைமண்டலமாக வரும் வாகனங்கள் தெரியாததால் பல விபத்துக்கள் நேர வாய்ப்பு உள்ளதாகவும் அடிக்கடி அதிகமான விபத்துக்கள் நடந்ததாகவும் பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். எனவே குறுகிய காலத்திற்குள் இந்த சாலையை சரி செய்து தருமாறு அரசு அதிகாரிகளிடமும் அரசியல் தலைவர்களிடமும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி



கருத்துகள்
கருத்துரையிடுக