ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா! கொண்டாட்டம்!!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார்.!! பள்ளியின்  ஆலோசகர் அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி, இயக்குனர் ரா.சுதர்சன், சிஇஓ காவியாமூர்த்;தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர் பழனிச்சாமி,  சிறப்பு விருந்தினராக செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவர் வைரவன் மற்றும் கௌரவ  விருந்தினராக பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜி. முருகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேசியக்கொடி ஒலிம்பிக் கொடி, பள்ளியின் கொடி ஆகியவற்றை ஏற்றிவைத்தனர். தொடர்ந்து  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினர் டாக்டர் பழனிச்சாமி பேசும்போது “தோல்வியடைந்த ஒருவனைப் பாராட்டுவது விளையாட்டில் மட்டுமே நிகழக்கூடியது. அதேபோல் வெற்றியடைந்தவனை யார் பாராட்டுவார்கள் தெரியுமா தோல்வித் தழுவியவர்கள். அந்த மனப்பக்குவத்தை மனிதனுக்குத் தருவது விளையாட்டு. இந்தப்  பள்ளியில் விளையாட்டு விழாவை சம்பிரதாயத்திற்காக நடத்தாமல்  விளையாட்டு விழாவை மாணவர்களின் உடல் திறன்களை  வெளிக்கொணரும் வகையில் சிறப்பாக நடத்தினீர்கள். ஆண்களோடு பெண்களும் சமமாக பிரமிடு அமைப்பில் நின்றபோது இருபாலருக்கும் சமவாய்ப்புத் தரும் நிர்வாகத்தின் பணியை நான் மெச்சினேன். இங்கே  பள்ளியிலே விளையாடுபவர்கள் நாளை கல்லூரி, பல்கலைக்கழகம் என்று தொடர்ந்து விளையாடவேண்டும். அதன் மூலம் அரசுப் பணிகளில் அமர்ந்து அழகுசெய்யவேண்டும். அந்த தருணத்திற்காக உங்கள் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி காந்திருந்து உங்களை தாயுமானவராகத் தாங்கிடுவார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று பேசினார். விழாவில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கபடி தடையோட்டம் ஆகியனவும்  பாரம்பரிய  விiளாயட்டக்கள் உரியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், கிட்டிப்புல், பரமபதம், பல்லாங்குழி, தாயம் ஆகிய விiளாயட்டுக்கள் நிகழ்த்தப்பட்டன.உரியடித்தல் நிகழ்வில் வெற்றிபெறுபவர்களுக்கு ஒரு தங்க காசு வழங்குவதாக பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க தலைவர். முருகராஜ் அறிவித்தார். பெற்றோர்கள் உரியடித்தல் மற்றும் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்வில் ஆர்வமாய் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.  விழாவில் நிகழ்த்தகப்பட்ட வரவேற்பு நடனங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டன, தெக்வோண்டா  செய்முறை விளக்கம், மற்றும் மாணவர்களின் கூட்டு உடற்பயிற்சி ஆகியன நிகழ்ந்தன. முன்னாதாக ஒலிம்பிக் தீபத்தை பள்ளியின் மாணவர்கள் ஏந்திவர சிறப்பு விருந்தினரகள்; தீபம் ஏற்றி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களால் புறா பறக்க விடப்பட்டது விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாகத் துவங்கியது. பெற்றோர்களுக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கும் லக்கி கார்னர் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாத பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்க நிறைவாக   துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.  விழாவில்;  அரசு வழக்கறிஞர் எம். செந்தில்குமார், பேராசியர்கள் அய்யாவு, கருப்பையா, கவிஞர் மகாசுந்தர், பாவேந்தர் காசிநாதன், மகாத்மா ரவிச்சந்திரன்  கல்வித்துறை வேங்கடசுப்பிரமணியன், ஓவியர் ராஜப்பா, கவிஞர்கள் பீர்முகமது, புதுகை புதல்வன், தமிழ்ச்செம்மல் ராமச்சந்திரன், ஜெயராமன்  பள்ளியின் மேலாளர். ராஜா , கௌரி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள். மனோகர் மற்றும் முத்துமணி , உதயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் வரவேற்புரை வழங்கிட நிறைவாக துணைமுதல்வர் நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், ஆனந்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!