ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு நியமன உறுப்பினர் நியமனம்!!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்காக சட்டத் திருத்த மசோதாக்களை முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மூலம்13.988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்று முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு நியமன உறுப்பினர் பாணாவரம் அடுத்த மகேந்திராவாடியை சேர்ந்த ராஜா என்பவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜாவிற்கு நியமன ஆணையை மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய நியமன உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட ராஜாவிற்கு திமுகவினர் வாத்து தெரிவித்தனர். இவர் திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக