ஓ பி சி சான்று விரைவாக வழங்க உத்தரவு தா வேண்டுமென கோரி கலெக்டருக்கு சமூக ஆர்வலர் மனு !!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது பல்வேறு சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுகந்தி வினோதினி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்தார் அதில் அவர் கேட்டுக் கொண்டதாவது வணக்கம் மேடம் அரக்கோணம் நகரத்தில் ஜெஇஇ தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் கல்வி சேர்க்கை என பல தேவைகளுக்கு 27 ந் தேதிக்குள் ஓபிசி சான்று அவசியம் தேவைப்பட்டுள்ளது இதற்காக பல இளைஞர்கள் அன்றாடம் வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர் ஆனால் எஸ் ஆர் ஐ பணிகள் நடப்பதால் சான்று கொடுக்க காலதாமதம் ஆகுமென அதிகாரிகள் மெத்தன போக்குடன் நடந்து கொள்கின்றனர் ஆகவே
அரக்கோணம் இளைஞர்கள் நலன் கருதி தாங்கள் ஓ பி சி சான்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு சமூக அ ஆர்வலர் டாக்டர் சுகந்தி வினோதினி ஆட்சியருக்கு அறக்கட்டளை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக