ஆற்காடு: வன ஆக்கிரமிப்பு !!
இராணிப்பேட்டை வனக்கோட்டம், ஆற்காடு வனச்சரகம், ஆற்காடு பிரிவு, புங்கனூர் காப்புக்காடு – ஹன்சா நகர் பகுதிக்குள் நடைபெற்று வந்த வன ஆக்கிரமிப்பு குற்றச்செயல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட தடய விசாரணையில், ஹன்சா நகர் பகுதியைச் சேர்ந்த பீ. கரீம் பாஷா என்பவர் சம்பந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தேவையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்திற்கு தொடர்புடைய அனைத்து ஆதாரங்களுடனும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக