நத்தத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நவீன எரிவாயு தகன மேடை (மின் மயானம்)!!


நத்தம் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்பது நத்தம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து நத்தம் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளராக நின்ற சேக் சிக்கந்தர் பாட்சா தேர்தலில் வெற்றி பெற்றால் மின் மயானம் அமைக்க தனது சொந்த இடத்தை இலவசமாக தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதனை ஒட்டி தேர்தலில் வெற்றி பெற்று  பேரூராட்சி தலைவராக உள்ள சேக் சிக்கந்தர் பாட்சா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நத்தம் அருகே அப்பாஸ்புரம், மெய்யம்பட்டி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை மின் மயானம் அமைக்க தானமாக வழங்கினார். அதைதொடர்ந்து 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் வளாகம்  கட்டுமான பணிகள் நிறைவடைந்து  நவீன எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட பொதுமக்கள்  பயன்பாட்டுக்கு வந்தது. திறந்த வெளியில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்ததால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் இதனை தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட பேரூராட்சி  உட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைவரும் இறந்தவர்களின் உடல்களை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொட்டாம்பட்டி சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். என்று பேரூராட்சி சேர்மன்  சேக்சிக்கந்தர் பாட்சா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!