புதுகண்டிகை கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்த நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியின் மதுரா புதுகண்டிகை கிராமம், மசூதி தெரு மேடு பள்ளங்களாக இருந்தது. எனவே இந்த தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் சயனபுரம் ஊராட்சியின் 15 வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ. வடிவேலு அவர்கள் நேரில் ஆய்வு செய்து, பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க கோரி ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார்.
சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, முகமது அப்துல் ரகுமான், புருஷோத்தமன், ரோஷன், லட்சுமிபதி, சுஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்




கருத்துகள்
கருத்துரையிடுக