நெமிலி ஒன்றிய பெருந்தலைவருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2/11/2025 அன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இராணிப்பேட்டை சமத்துவபுரம் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் 72 ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு 296 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
அப்போது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய, அயராது பாடுபட்ட நெமிலி ஒன்றிய குழு தலைவரும், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளருமான பெ. வடிவேலு மற்றும் அவருடன் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள், மேடையில் பேசும்போது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் அறிமுகப்படுத்தி, அவரை பாராட்டி துணை முதலமைச்சர் கரங்களாள் பட்டு வேட்டி அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சித் தலைவர். சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஈஸ்வரப்பன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். முனிரத்தினம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்
கருத்துரையிடுக