மாட்டு வண்டி எல்கை பந்தயம்!


தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் காப்பிலியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 66 ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இங்கு மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பங்கு பெற்றனர் இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் போட்டி எல்லையை நோக்கி ஓடின. மாட்டு வண்டி ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆரவாரம் செய்தனர். இந்தப் பந்தயம் தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிசான் மாடு, பெரிய மாடு என ஆறு வகையான பிரிவுகளில் நூற்றுக்கணக்கான மாடுகள் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டது. இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த போட்டி கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வரை சுமார் எட்டு கிலோமீட்டர் வரை போட்டி  நடந்தது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!