இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முகப்புரையை வாசித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்!


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முகப்புரையை வாசித்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன் தலைமையேற்றார்.

சுதந்திர இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 76ஆம் ஆண்டினையொட்டி  நவம்பர்  26ஆம் நாள் பள்ளிகளில் அரசியல் அமைப்புச் சாசனத்தின் முகப்புரையை மாணவர்கள் வாசிக்க வேண்டுமென்ற தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க இன்றைய தினம் பள்ளியின் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வகுப்பறைகளில் அரசியல் அமைப்புச் சாசனத்தின் முகப்புரையை  வாசித்தனர். இந்த நிகழ்வானது அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட அந்த நன்னாளை நினைவுகூர்வதோடு இளம் தலைமுறை மாணாக்கர்கள் மத்தியில் தனி மனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு  ஆகியவற்றை அறிவுறுத்துவதாகவும் அமைந்தது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!