அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் சீரமைப்பு கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உள்ளடங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு சீரமைப்பு கூட்டம் அன்னபூர்ணா பார்ட்டிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய பார்வையாளராக முன்னாள் அமைச்சர். ஜெடி சீலம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் குணாநிதி நாராயணமூர்த்தி மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர். பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய சிறப்பு பார்வையாளர்கள் கட்சி பலப்படுத்த வேண்டும் அதற்காக இளைஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் அதிலும் அவர் அடிமட்ட தொண்டர்கள் வரை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக  இருக்க வேண்டும் ஏனெனில் இனி ஒரு நாளும் நியமன தலைவர் இருக்காது என்று பேசினர் பிறகு

மாவட்ட தலைவர் பதவிக்கு மனு செய்திருந்த நரேஷ் குமார், ராஜ்குமார், பிரபு, ஜெய்பாபு, அண்ணாதுரை,  கோடீஸ்வரன், சீனிவாசன், மொய்தீன், ஏ. எம். கதிர்வேல், நந்தகுமார் மற்றும் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!