திருமணத்துக்கு முன்பு ஆண்-பெண் நெருக்கம் சாதாரணமாகி வருகிறது! மதுரை ஐகோர்ட் கருத்து!!
திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மதுரை ஜ கோர்ட் கருத்து!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் மதுரையில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார்.அப்போது பெண் வக்கீலை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உறவு கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என அந்த வாலிபர் சார்பில் மதுரை ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்தார்.
அதில் மேற்கண்ட இருவரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அவர்களுக்கு இடையே நடந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்ப நடவடிக்கை.எனவே ஒருவர் மற்றவர் மீது தார்மீக குற்றத்தை சுமத்த சட்டத்தை கருவியாக பயன்படுத்துவது ஏற்படுவது அல்ல
சமீப காலமாக இந்த வகையான புகார்கள் அதிகரிப்பதை இந்த கோர்ட் கவனத்தில் கொள்கிறது.அந்த வகையில் மனுதாரர் மீது வழக்கு தொடர்ந்தது சட்டத்தைப் துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என கோர்ட் கருதுகிறது.எனவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக