பளு தூக்கும் போட்டியில் வெற்றி! வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி !!
புதுக்கோட்டைமாவட்டம்,புதுக்கோட்டையில்நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் சாலை பணியாளர். ஜேம்ஸ் புதல்வி செல்வி. ஜெ .மேரி சாமினி , மாண்புமிகு முதலமைச்சர் மாநில அளவிலான கோப்பையில் பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார். இதனையொட்டி அவர் தான் பெற்ற சான்றிதழை கனிமவளத்துறை அமைச்சர்.
எஸ். ரகுபதி அவர்களிடம் காண்பித்து ஆசி பெற்றார். அவருக்கு அமைச்சர் பரிசு வழங்கி மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்தினார். உடன் ஒன்றிய திமுக செயலாளர். கே. ராமகிருஷ்ணன், திமுக முன்னோடி மணிமாறன், ஹைவேஸ் செந்தில் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக