வளரிளம் பெண்களுக்கு தொற்றா நோய் ,மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு! தண்ணீர் போதிய அளவு பருகுங்கள்!மருத்துவர் வேண்டுகோள்!!!
தேவகோட்டை - பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவ கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன். மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் 6,7,8 ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர். லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆல் தி சிலன்ட்ரன் நிறுவனத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். கார்த்திக் முன்னிலை வகித்தார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவர். மல்லிகை பெண்களின் உடல் நல பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்து பேசுகையில்,மாணவிகள் ரத்த சோகை நீங்க கடலை மிட்டாய்,பொறி உருண்டை ,பழங்கள்,கீரை வகைகள்,காய்கறிகளை சாப்பிட வேண்டும்.மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என்றார்.நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக