பட்டப்பகலில் விவசாயி வெட்டிக் கொலை!


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பொதுமக்கள் கண் முன் பட்டப் பகலில் விவசாயி வெட்டிக்கொலை. சீலையம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி வயது 60 அப்பகுதியில் வயல்களை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருபவர் தற்போது விவசாயம் செய்த நெல் மணிகளை களத்தில் உலர்த்திக்கொண்டு இருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பால்பாண்டியை கீழே தள்ளி அறிவாளால் வெட்டி பொதுமக்கள் கண்முன்னே கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அவரது உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேனி -குமுளி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர் . குற்றவாளியை கைது செய்யப்படவிட்டால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் அவரது உடல்  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!