ஆற்காட்டில் ஜே.எஸ்.ஆர். ஸ்மைல் இந்தியா பள்ளியின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஜே.எஸ்.ஆர். ஸ்மைல் இந்தியா பள்ளி சார்பில், ஆற்காடு நகர போலீஸ்சாருடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது.

ஆற்காடு பேருந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலத்தில், பள்ளியின் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஏந்தி, அனைவரும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, பொதுமக்களிடம் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.

இவ்வூர்வலத்தை பள்ளித் தாளாளர் ஜீவராஜ், முதல்வர் ஜான் லாரன்ஸ், ஆற்காடு நகர உதவி ஆய்வாளர் அண்ணாமலை, போக்குவரத்து காவல் ஆய்வாளர்  லட்சுமணன், ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் தமிழ்நாடு துணிக்கடை வழியாக பயணம் செய்து காலை 11 மணியளவில் நிறைவடைந்தது.

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!