ராணிப்பேட்டையில் தோட்டக்கலை அலுவலர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கோரிக்கைகளில், உழவர் பெருமக்களுக்கு அதிக வருமானம் வழங்கும் தோட்டக்கலைத் துறை வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், தோட்டக்கலைப் பட்டம் மற்றும் பட்டயதாரர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் சூழ்நிலையை தடுக்கும் வகையில் தீர்வுகளை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வேளாண் விஞ்ஞானிகள் குழு பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள UATT 2.0 திட்டத்தை கைவிட வேண்டும் என்பதையும், அவசரகாலங்களில் தோட்டக்கலைத் துறைகள் அலுவலர்களுக்கு வழங்கப்படும் பணியிடம் பயிற்சி நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள்வலியுறுத்தினர்.கோரிக்கைகளை முன்வைத்து அலுவலர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!