ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா! எழுத்தாளர். மு. முருகேஷ் சிறுவர் கதைகள் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகளே நடத்திய குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் கவிஞர். தங்கம் மூர்த்தி மற்றும் இயக்குனர். சுதர்சன் ஆகியோர் குழந்தைகள் தினத்தில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மலர்க் கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பால சாகித்திய புரஸ்கர் விருது பெற்ற புதுக்கோட்டை எழுத்தாளர். மு. முருகேஷ் எழுதிய எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள் மற்றும் படித்து பழகு-2 ஆகிய இரண்டு சிறுவர் கதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. குழந்தைகளே நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் எட்டுக்கால் பூச்சி வேடமணிந்த இரண்டாம் வகுப்பு தன்விகா வழங்கிட ”எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்” சிறுவர் கதை நூலை முற்றம் சிறார் விருதாளர் மாணவி மா.பா. நெகாசினி வெளியிட வாசிப்போர் மன்ற செயலாளர் த.மதுஸ்ரீ முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ”படித்துப் பழகு-2 நூலை தொலைக்காட்சி பேச்சரங்க வெற்றியாளர். ஜெ. அதியன் வெயியிட சூப்பர் சிங்கர். விஷ்ணு மற்றும் குடைவள்ளல் குறும்படததில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்ற கவினேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். வாசிப்போர் மன்ற வருங்காலத் தலைவர் மாணவி. ரா.அகல்யா, நகைச்சுவை முரசு அ.அ.அதியன், வாசிப்போர் மன்ற தலைவர். ச.தாரிகா ஆகியோர் கதைகள் பற்றிய கருத்துரைகள் வழங்கினர். எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள் நூலின் பதினைந்து கதைகளுக்கும் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு நினைவுப் பரரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் இளையராஜா கண்ணன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய மாணவர்ளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார். சிறுவர் கதைகள் எழுதிய எழுத்தாளர். மு. முருகேஷ் தான் சாகித்திய அகாடமி விருது பெற்றிருந்தாலும் நான் பிறந்த மண்ணில் என்னைக் கொண்டாடும் இந்தப் பள்ளியின் முதல்வர் கவிஞர். தங்கம் மூர்த்தி மற்றும் குழந்தைகளுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இங்கே கதைகள் பற்றிய கருத்துரைகள் வழங்கிய குழந்தைகள் நான் எழுதிய கதைகளுக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தார்கள். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. அழகிய ஓவியங்கள் வரைந்து கொடுத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்,மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன் என்று பேசினார். நிகழ்வுக்கு அ.அ.அட்சயாஸ்ரீ தலைமையேற்றார். முன்னதாக மாணவி தாரிகா வரவேற்க நிறைவாக அஸ்மிட்டா ரிபானா நன்றி கூறினார். நிகழ்வில் பள்ளியின் இயக்குனர். சுதர்சன், துணைமுதல்வர். குமாரவேல், மேலாளர். ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன் உதயகுமார், , ஓவியர் ராஜப்பா, கவிஞர்கள் ராசி பன்னீர் செல்வன், முருக பாரதி, ஆலங்குடி வெள்ளைச்சாமி, புதுகை புதல்வன், நிலவை பழனியப்பன், கண்ணதாசன், மகா சுந்தர், மலையப்பன், ஆசிரியர். மாரியப்பன், காவிரி தமிழ் முற்றம் செயலாளர். சலேத், மற்றும் ஏராளமான பெற்றோர்களும், மாணவர்ளும், ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்வினை மாணவிகள். ச.ரா. நிகிதாஸ்ரீ மற்றும் கசானா இஜ்ஜத் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக