பர்கூரில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் சொத்து அபகரிக்க திமுகவிற்கு துணை போகும் பிஜேபி இந்து முன்னணியினர்!!

பர்கூரில் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறதா? இந்து சமய அறநிலையத்துறை கோவில் சொத்தை அபகரிக்க திமுகவிற்கு துணை போகும் பிஜேபி இந்து முன்னணியினர்.கோவில் சொத்தை காப்பாற்றுவாரா? முதலமைச்சர்!..

ஈரோடு மாவட்டம், அந்தியூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அந்தியூர். ஈஸ்வரனிடம்  பர்கூர் தேவர் மலையில் உள்ள வந்தேஸ்வரன் திருக்கோவிலில் வழிபாட்டு உரிமையை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி தொட்டையன் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொட்டையன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கூறுகையில் இந்து லிங்காயத்து பேடகம்பனா சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக பர்கூரில் வாழ்ந்து வருகிறோம். பர்கூர் தேவர் மலையில் உள்ள பந்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது அது எங்கள் சமூக குலதெய்வம் ஆகும். நாங்கள்  தலைமுறை தலைமுறையாக அந்த கோவிலில் தான் பூஜை செய்து வழிபட்டு வந்தோம் கடந்த 16/ 6/ 2025 அன்று முதல் கும்பாபிஷேக விழாவிற்கு நாங்கள் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு எங்கள் வழிபாட்டு முறைகளை செய்யலாம் என சென்ற போது எங்களை பூசாரி சிவா முருக தம்படி தொட்டய தம்பிடி பந்தயத்தம்படி பசுவராஜ் மற்றும் அவர்களுடன் இருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை கோவிலுக்குள் வரக்கூடாது எந்த வழிபாடும் வழிபாட்டு முறைகளையும் செய்யக்கூடாது செய்யவும் அனுமதிக்க மாட்டோம் என்று எங்களை வெளியே தள்ளினர் ஏன் என்று நாங்கள் கேட்டதற்கு எங்களை அடித்து ரகளை ஈடுபட்டனர். நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் அமைச்சர்களுக்கும் நேரிலும் கடிதம் மூலமாகவும் பலமுறை புகார் கோரிக்கை மனுவும் கொடுத்து விட்டோம் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் எங்களை கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னவர்கள் கோவில் பூசாரியுடன் இணைந்து அறநிலையத்துறை அமைச்சர் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் செய்தி துறை அமைச்சர் மாவட்டச் செயலாளர் என அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்து மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டு பேசுவதும் அவர்களும் இவர்களுக்கு மிகவும் நெருக்கமான முறையில் பேசுவதும் வழக்கத்தில் வைத்துக் கொள்வதும் எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது நாங்கள் தொடர்ந்து ஆறு மாத காலமாக கோரிக்கை மனுக்கள் புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அறநிலைத்துறை அமைச்சர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காவல் துறை ஆகியோர் இவர்கள் சென்று அழைத்ததும் வருவதும் இவர்களுடன் எந்நேரமும் தொடர்பில் இருப்பதும் மேலும் கோவில் நிர்வாகத்தை பற்றி நாங்கள் புகார் கொடுத்தாலும் இதுவரை எந்த ஒரு ஆய்வும் கேள்வியோ அவர்களிடத்திலும் கோவிலிலும் செய்யாமல் இருப்பது மேலும் எங்கள் சந்தேகத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது கோவில் சொத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று சொல்லியும் எப்படி அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினரும் அவர்களிடத்தில் சகஜமாக நெருக்கமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தொட்டையன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பிலும்  கேள்வி எழுகிறது என்று கூறினர். தொடர்ந்து எங்கள் கோரிக்கை எங்கும் பலன் அளிக்காததால் அந்தியூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் அந்தியூர். ஈஸ்வரனிடம் எங்கள் கோவில் வழிபாட்டு உரிமையை மீட்டு தர வலியுறுத்தி நம்பிக்கையோடு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் நிச்சயம் மீட்டுத் தருவார் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட செய்தியாளர் யோகேஷ்வரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!