மாமன்னர் ராஜேந்திர சோழன் அவர்கள் கடாரம் சென்று வென்ற ஆயிரம் ஆண்டு நிறைவை அரசு விழாவாக கொண்டாட வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !!
ராணிப்பேட்டை மாவட்டம்,மன்னரின் எட்டுத்திக்கும் சென்று வென்று சர்வதேச அளவில் தமிழர்களின் புகழைப் பரப்பி எங்கும் எதிலும் நிர்வாகம் மற்றும் ஆட்சி முறையில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பான ஆட்சி செய்தவர்களில் மாமன்னர் ராஜேந்திர சோழன் முதன்மையானவர். இவர் தென் கிழக்கு ஆசிய நாடுகளை தன் ஆட்சியில் கீழ் கொண்டு வந்து ஸ்ரீ விஜய தமரலிங்கம் ஹேமர் உள்ளிட்ட மலேசியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நாடுகளை ஆண்ட மன்னர்களை தன் ஆட்சியில் கீழ் கொண்டு வந்தார்.
அந்தப் பகுதிகளில் தமிழ் மன்னர்களுக்கு பிற மன்னர்களால் ஏற்பட்ட இடையூறுகளை அகற்றும் நோக்கில் ஸ்ரீ ராஜேந்திர சோழன் கடல் கடந்து மிகப் பெரும் கடற்படையுடன் கடாரம் சென்றார். என்பது வரலாற்று உண்மையாகும் இவ்வாறு வெற்றி பெற்ற ஆண்டு1025 ஆகும்.
இப்பொழுது அந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு நூறாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது அரசு விழாவாக கொண்டாட தாங்கள் நடவடிக்கை எடுக்க பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக