தொல்லை தரும் குரங்கு அகற்றம் ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான ரயில் பயணிகள் குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தி வந்தனர் அதே நேரத்தில் அங்கு வசித்து வந்த குரங்கு கூட்டம் அனைவருக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தது.
இது தொடர்பாக அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பெயரில் ரயில் நிலையத்தில் வசித்து வந்த சுமார் 15 குரங்குகள்,பயணிகளுக்கு எந்தவிதமான இடையூறுகள் இல்லாமல் கூண்டுகளில் பிடிக்கப்பட்டது. இதற்காக பயணிகள் சங்கம் சார்பில் ரயில் நிலைய மேலாளர். டி.கே.வெங்கடேசன் ரயில் நிலைய தலைமை வணிக மேலாளர். யுவராஜ் மற்றும் ரயில் பாதுகாப்புப்படை துணை ஆய்வாளர்.ஜெயக்குமாருக்கும்
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள். எம்.எஸ்.குணசீலன்,ஏகாம்பரம்,ப.எஸ்வந்தராவ்,கே.எம்.தேவராஜ் ,மூர்த்தி, டாக்டர். நவநீதம்ராஜன், பாத்திர கடை சரவணா மருந்துக் கடை, ஆர்.வெங்கட்டரமணன், அ.ஆனந்தன், ரகுநாதன், . தியாகராஜன், சித்தேரி குமார், மோசூர் ராஜேஷ் சரஸ்வதிம்மாள் அருள்தாஸ் ஆகியோருக்கும் சங்கத்தின் சார்பில் தலைவர்.நைனா மாசிலாமணி, நன்றிதெரிவித்துக் கொண்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக