பழனியில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு போங்கு காட்டிய வட வாய்க்கால் கைது !!
திண்டுக்கல் மாவட்டம்,பழனியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை நிலுவையில் இருந்த வழக்கு நிறைவு பெற்றது குற்றவாளி வட வாய்க்கால் என்ற துரை கைது பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளை அடிதடி திருட்டு என திண்டுக்கல் மற்றும் பழனி உள்ளிட்ட இடங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆயக்குடி காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி அவர்களின் மேற்பார்வையில் ஆயக்குடி சார்பாக காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர். பழனிவேல் மற்றும் தலைமை காவலர். துர்க்கை அம்மன் குற்றவாளியை தேடப்பட்டு வந்த நிலையில் ஆயக்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதப்பட்டினம் அருகே உள்ள மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை காவல்துறையை கண்டவுடன் தப்பி ஓட முயற்சித்தார். அவரை சுற்றி வளைத்து துரத்திப் பிடித்தார் சார்பு ஆய்வாளர் திரு ஆனந்த் மற்றும் அவரது காவல்துறையினர் பின்பு குற்றவாளியின் பிடியாணையை நிறைவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக