நெல் கொள்முதல் செய்யபடாததால் விவசாயிகள் வருத்தம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம் தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் பல்லாயிரம் நெல் மூட்டைகள் முடக்கம் என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர் கருப்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் அறுவடை செய்யப்படும் நிலையில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அறுவடைப்பணியில் தொய்வு நிலை ஏற்பட்டதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மத்திய குழு கடந்த வாரம் கட்டக்குளம் ஆண்டிப்பட்டி போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறிது சேதம் அடைந்த நிலையில் நெல் மூட்டைகள் இருப்பதால் சீக்கிரம் நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தியும் கொள்முதல் நடக்காத நிலையில் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக