சின்னமனூரில் கம்பம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது!!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கம்பம் சட்டம் மன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.

 இந்த மாநாட்டில் தமிழ் மாநில பொதுச் செயலாளர். இராம சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அவர் கூறியதாவது இப்ப கட்சி  ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு திடீரென எஸ் ஐ ஆர் ஐ கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். ஆனால் அரசியலே தெரியாத

விஜய் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.எனவும் அதேபோல் இந்த எஸ் ஐ ஆர் பார்த்து மு க ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றதாகவும் இதே போல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் எனவும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவர். ராஜபாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் பி. சி.பாண்டி மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார் நகரத் தலைவர் சிங்கம் மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர்.லோகேந்திரராஜன் சின்னமனூர் நகர பொருளாளர். நாகராஜ் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணியினரும் திரளாக கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!