கிறிஸ்தவ வாக்குகளை ஆளுங் கட்சி இழப்பதாக டாக்டர். ஐசக் பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய குளோபல் சர்ச் ஆப் இந்தியா சொனாட்டின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில உலக தலைவர் டாக்டர். ஐசக் ஐயா தலைமை தாங்கி பேசியபோது அவர் கூறியதாவது; 

கடந்த 10 ஆண்டுகாலம் கிறிஸ்தவ மக்கள் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் இன்று எந்த வேலை வாய்ப்புகலும் இட ஒதுக்கீடும் இல்லாமல்  அரசு கைவிடப்பட்ட நிலை உள்ளது இதனை கவனத்தில் கொண்டு  அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி குளோபல் கிருஷ்டியன் சர்ச் ஆப் இந்திய சினாடு  சார்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் முதல்வரை தனியாக சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் கண்டன ஆர்ப்பாட்டம், கவனயீர்ப்பு கூட்டம் போன்றவற்றை நடத்தி தமிழக அரசுக்கு தெரிவித்து வருகிறோம் ஆனால், இதுவரைக்கும் தமிழக அரசு  செவி சாய்க்கவே இல்லை அதே நேரத்தில் சபைகள் அல்லாத பால் தினகரன் கோபி விலாசரஸ் போன்றோர் பாஸ்டர்ளை அழைத்து கூட்டங்கள் நடத்துவது போல் நாடகமாடி  மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை தடுத்து வருகின்றனர் மேலும் உரிமைகள் கிடைக்கும் நேரத்தில்   முதல்வரை சந்தித்து கிறிஸ்துவ மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையும் இட ஒதுக்கீட்டையும் கெடுத்து வருகிறார்கள் இதனால் கிறிஸ்துவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும்  உரிமை பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை எனவே நமக்கு  கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனால்  பால் தினகரன் மோகன் சி லாசரஸ் போன்றோர் தான் காரணம் என்பதை இந்த கூட்டத்தில் வாயிலாக முடிவு செய்யபடுகிறது. வளர்ந்த திருச்சபைகளுக்கு தான் ஆலய புனரமைப்பு நிதியை கொடுக்கிறார்கள் ஆனால் கட்ட முடியாத வசதியில்லாத வர்களுக்கு   நிதி கொடுப்பதி ல்லை அரசினுடைய வாரிய கார்டும் கொடுப்பதில்லை பொறுப்புகளும் கொடுப்பதில்லை இப்படியே போனால் நிச்சயமாக கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை ஆளுங் கட்சி பெற முடியாத நிலைமைக்கு தள்ளபடும் என்பதை சுட்டிகாட்டுகிறோம்.  ஆகையினால் கிறிஸ்துவ மக்களின் கட்சியான அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சிக்கு 38 மாவட்டங்களில்  38 தொகுதிகளில் வாரியங்களும் கிறிஸ்துவ மக்களுக்கான இட ஒதுக்கீடும் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்காவிட்டால் நிச்சயமாக  ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளபடுவீர்கள்  என்பதை இந்த உயர்மட்ட கவுன்சில் கூட்டத்தின் வாயலாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு டாக்டர் ஐசக் ஐயா பேசினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!