சக்கரமல்லூர் கிராம அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது:
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமம் அருகே செல்லக்கூடிய பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி மறுக்கக்கூடிய மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து இருப்பதாகவும் இதனால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் மேலும் வங்கிகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய கடன் மற்றும் லோன் போன்ற தொகைகள் மற்றும் வட்டிகளை திரும்ப செலுத்த முடியாமல் வங்கி நிர்வாகத்தினரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது மற்றும் கடன் பெற்ற நபர்களுக்கு பிடிவாரன் போடப்படுவதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாக வேதனையாக கண்டன உரையாக எழுப்பினர்.
எனவே மாவட்ட நிர்வாகத்தினர் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சக்கரமல்லூர் கிராம பகுதி அருகே பாலாற்றில் மணல் குவாரி திறப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக